Income Tax Relief: கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் வரி செலுத்துவோருக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கொரோனா நெருக்கடியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் கொரோனா நிவாரண நிதி, மற்றும் சிகிச்சைக்காக பெற்ற உதவித் தொகை தொடர்பாக பல வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா நிதி தொடர்பான வரி விலக்கு
கொரோனா சிகிச்சைக்காக, அலுவலகத்தில் இருந்து கிடைத்த உதவிக்கு எந்த வரியையும் வசூலிக்க போவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக என்று நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். அதாவது, வேலை செய்யும் அலுவலகம், நிறுவனம் அல்லது  முதலாளியோ அல்லது நலம் விரும்பிகள் மூலம் கிடைத்த நிதியில், கொரோனா சிகிச்சைக்காக செலவழிக்கப்பட்டிருந்தால், அந்த நிதிக்கு, வரி விலக்கு வழங்கப்படும்.


ALSO READ | ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு


கொரோனா இழப்பிற்கு கிடைத்த நிவாரண தொகைக்கும்  வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19  காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியை பொறுத்தவரை  ரூ .10 லட்சம் வரை  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் 2019-20 நிதியாண்டிற்கும் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் செல்லுபடியாகும். பல சந்தர்ப்பங்களில், கால வரம்பை மேலும் நீட்டிப்பதன் மூலம் வரி செலுத்துவோருக்கு உதவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய உள்துரை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். இதன் காரணமாக, இப்போது பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



ALSO READ: Bogus vaccination camp: பணத்துக்காக போலி தடுப்பூசி போடும் பகீர் தகவல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR