பெட்ரோல், டீசல் விலை உயருமா; மத்திய அரசு கூறுவது என்ன.!!
தில்லியில் நேற்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களிடம் பேசினார்.
பெட்ரோல், டீசல் விலையில் 125வது நாளாக எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக விரைவில்பெட்ரோல் டீசல் விலை ரூ.15 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பரவலாக கூறப்படுகிறது.
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.
மேலும் படிக்க | இன்று இரவு முதல் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கலாம்! ALERT
இந்நிலையில், தில்லியில் நேற்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், தற்போது நாட்டில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை இல்லை என்றூம், இந்தியா கச்சா எண்ணெய்க்கு 85 சதவீதமும், எரிவாயுவுக்கு 55 சதவீதமும் இறக்குமதியை சார்ந்திருந்தபோதிலும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது எனவும் உறுதி கூறினார்.
மாநில தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது, தற்போது மீண்டும் அவற்றின் விலையை உயர்த்தும் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும், இந்த விஷயத்தில் மக்கள் நலன் கருதியே தேவையான முடிவுகளை மத்திய அரசு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், மேலும் சில நாட்கள் சர்வதேச அளவிலான சூழ்நிலையை கருத்தில் கொண்ட பிறகு எண்ணெய் விலையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் படிக்க: வரும் நாட்களில் PUC சான்றிதழ் இல்லை என்றால் பெட்ரோல் கிடையாது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR