பிரதமர் நரேந்திர மோடி இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளரச்சியை இரட்டை இலக்கு நோக்கி நரத்துவதே எங்கள் நோக்கம் என தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் மோடி கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரமான இந்தூரில் சயீப் மசூதி உள்ளது. அந்த மசூதியில் தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இன்று பிரதமர் மோடி கலந்துக்கொண்டார். அப்பொழுது அவர் உரையாற்றினார்.


அதில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுவது பெருமை அளிக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் முக்கிய பண்பாகும். போஹ்ரா சமுதாயத்தினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை மூலம் கள்ளசந்தைகளை அழித்து நேர்மையான முறையில் வணிகம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி திறன் வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது நாட்டின் ஜிடிபி 8 சதவீதமாக இருக்கிறது. இது வரும் காலங்களில் இரட்டை இலக்காக(10 சதவீதம்) மாற்ற தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 


இந்தியாவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில் துறை, தொலைபேசி மற்றும் பல துறைகளில் முதலீடுகள் அதிகரித்து உள்ளன. இதன் விளைவாக உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில் 125 கோடி மக்களின் உழைப்பால் ஜிடிபி எட்டு சதவீதத்திற்கு அதிகமாக அதிகரித்துள்ளது. வேகமாக பொருளாதாரம் வளர்ந்து வரும் உலக நாடுகளில் நமது நாடு முன்னோடியாக உள்ளது.


இதனால் "இப்போது எங்கள் கண்கள் இரட்டை இலக்க விகிதம் வளர்ச்சியை நோக்கியே இருக்கிறது" நான் நம்புகிறேன் இந்த இலக்கை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன். இதற்க்கு மத்திய அரசு மட்டுமில்லை, மாநில அரசுகளும் துணை நிற்க வேண்டும். ஆனால் எப்படி நமது கையில் உள்ள விரல்கள் ஒரே மாதிரியாக இல்லாமல், வேறவேற மாதிரி இருப்பது போல, சில மாநில அரசு வஞ்சகம் செய்கிறது. 


 



நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக சுகாதாரம் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மலிவான சிகிச்சை மற்றும் மருந்துகளின் வசதிகள் அதிவேகமாக விரிவடைந்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டில் ஆயுஸ்மான் பாரத் திட்டம் மூலம் கிட்டத்தட்ட 50 மில்லியன் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. 


2022 ஆம் ஆண்டுக்குள் ஏழைகள் அனைவருக்கும் வீடு என்பது அரசின் முக்கிய இலக்காக உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு வீட்டுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.