இந்தியாவில் வாழும் மக்களின் இனத்தூய்மை மற்றும் மரபியல் தொடர்ச்சியை கண்டறிய DNA ஆய்வு மேற்கொள்ள மத்திய கலாச்சாரத்துறை திட்டமிட்டு இருப்பதாக கடந்த 2 வாரம்க்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாதி மற்றும் மத ரீதியில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், மோதல்கள் என ஏற்கெனவே பல்வேறு சிக்கல்களில் இருக்கும் இந்திய சமூகத்தில் இந்த திட்டம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அப்போதே பரவலாக எதிர்ப்பு எழுந்தது. 


இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் கோவிந்த் மோகன் பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான வசந்த் ஷிண்டே மற்றும் லக்னோவில் உள்ள பழங்கால அறிவியல் கல்வி நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 


இதுபற்றி கருத்து கூறிய வசந்த் ஷிண்டே, மனிதர்களின் மரபணுக்கள் 10,000 ஆண்டுகளில் எப்படி உருமாற்றம் அடைகின்றன ஒரு மரபணு வரிசையுடன் மற்றொரு மரபணு வரிசை கலப்பது எப்படி என்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும் இது இந்திய மக்களின் இனத்தூய்மையை கண்டறிவதற்கான முயற்சியாகவும் பார்க்கலாம் என அவர் கூறினார். 


மேலும் படிக்க | சமாதி நிலையில் நித்யானந்தா உயிரிழப்பு? - சிலைக்கு பூஜை செய்யும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பு


இந்த நிலையில் மத்திய கலாச்சாரத்துறையின் இந்த திட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் உள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வரலாற்று அறிஞர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், செயற்பாட்டாளர்கள் அடங்கிய 122 பேர் கொண்ட குழு கடிதம் எழுதியுள்ளது. அதில், மத்திய அரசின் இந்த திட்டம் அபத்தமானது மட்டும் அல்லாமல் மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே இன மரபு என்பது வழக்கொழிந்துவிட்டது. இனத்தூய்மை குறித்த எந்த ஆய்வும் இப்போது இல்லை எப்போதும் நடத்தக்கூடாது. இது பற்றி பகிரங்கமான மறுப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 


உலகின் பல்வேறு பகுதிகளில் இனத்தூய்மை அதிகம் என கூறப்படுபவர்களால் இனத்தூய்மை குறைவாக உள்ளவர்கள் கடும் இன்னல்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருவதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. சாதி ரீதியாக மக்களை எடைப்போடுவதை நிறுத்த வேண்டும் என 122 பேர் கொண்ட அறிஞர்கள் குழு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும், இந்த திட்டத்தின் வழியாக எந்த மாதிரியான முடிவை மத்திய அரசு எதிர்நோக்குகிறது என்பது பற்றி தங்களுக்கு தெரியவில்லை எனவும், இனத் தூய்மை விவகாரத்தில் தலையிட்டால் இந்தியர்களுக்கு இடையிலான ஒற்றுமை சீரழியும் என்பது மட்டும் உண்மை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | திமுகவின் ஊழலை பற்றி கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் ஊழலை பேசாதது ஏன்? - சீமான் கேள்வி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR