திமுகவின் ஊழலை பற்றி கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் ஊழலை பேசாதது ஏன்? - சீமான் கேள்வி

ஓர் ஆண்டு திமுக ஆட்சியில் ஊழல் பட்டியல் குறித்து பேசும் அண்ணாமலை அதிமுகவின் பத்தாண்டு ஊழல் குறித்து கேள்வி கேட்பாரா என நெல்லையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jun 11, 2022, 05:57 PM IST
  • மதமோதல்களை தூண்டி நாட்டில் பிரிவனை ஏற்படுத்த பாஜக முயற்சி
  • மத்திய அரசின் 8 ஆண்டுகால ஆட்சி சாதனையல்ல வேதனை, சோதனை
  • நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்
திமுகவின் ஊழலை பற்றி கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் ஊழலை பேசாதது ஏன்? - சீமான் கேள்வி  title=

நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலேறு பெருஞ்சித்திரனார் நினைவுதினம் நெல்லை ரஹ்மத் நகரில் அனுசரிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பெருஞ்சித்திரனார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் நினைவு ஜோதியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது : - 

நாட்டின் இறையாண்மை குறித்து பேடிவிட்டு நாட்டை துண்டாடும்  செயலை ஆர்.எஸ்..எஸ் மற்றும் பாஜக செய்கிறது. நாட்டின் குடிமைகள் மீது வெறுப்பை வைத்துகொண்டு இறையான்மை குறித்து பாஜகவினர் பேசுகின்றனர். இந்து கோட்பாட்டாளர்களுக்கும் சிவனுக்கும் சம்பந்தமில்லை. மதமோதல்களை தூண்டி தூண்டி நாட்டில் பிரிவனை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் கடன் 90 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 7000 கோடி ரூபாயை இந்தியா இலங்கைக்கு கொடுப்பதால் என்ன பயன். இலங்கையின் சிங்களர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பார்களா? தனது நாட்டின் ஒரு மாகாணமாக இலங்கையை சீனா மாற்றிவிட்டது. இலங்கையில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகையில் கூட சீன எழுதுக்கள் இடம்பெற்றுள்ளன.18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையில் இருந்த திமுகவிற்கு கட்சத்தீவை மீட்க நேரம் கிடைக்கவில்லை.

இலங்கையை விட மோசமான நிலைக்கு இந்தியா தள்ளபட்டுகொண்டிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதனை மறைக்க நினைக்கிறார்கள். ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் எதற்கு நடத்தப்பட்டுகிறது. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்தால் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய தேவையே இருக்காது. மத்திய அரசின் 8 ஆண்டுகாலமும் தமிழக அரசின் ஓராண்டு காலமும் சாதனையல்ல வேதனை, சோதனை. ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழலை கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து ஏன் பேசுவதில்லை. 

மேலும் படிக்க | இந்தியாவில் ராணுவம், பொருளாதாரத்தைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அவர்களுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பார்களா?. திமுக பாஜகவின் பி டீம் அல்ல, அவர்கள் தான் மெயின் டீம். 8 ஆண்டு மத்திய அரசு ஆட்சியில் ஊழலே இல்லை என செல்பவர்கள் ரஃபேல் போர் விமான விவகாரத்தில் 400 கோடி ரூபாய் ஊழல் குறித்து வாய்திறக்க மறுப்பது ஏன்?. ரபேல் குறித்து நீதிமன்றம் கேள்வி கேட்டபோதும் பதில் அளிக்கவில்லை. 

பாஜக ஆளும் 20 மாநிலங்களில் ஊழல் நடைபெறாமல் இருக்கிறதா?. தமிழகத்தின் ஒரே எதிர்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது. 2024-ல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதுவும் கிடைத்தால் 7 லிருந்து 10% ஆக வாக்குவங்கி உயரும். நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் பொது மக்களிடம் கொண்டு செல்லும் பணி தொடர்ந்து நடைபெறும். நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வோம்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார். 

மேலும் படிக்க | ATM இயந்திரத்தில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News