கேரளாவில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 லட்சத்துக்கு அதிகமான பேர் வீடுகளை இழந்துள்ளனர். மே மாதம் 29 ஆம் தேதி முதல் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி இந்திய நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மழை பாதிப்புகள் பற்றி கேரளா முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு கேரளாவுக்கு ரூ. 500 கோடி நிதியுதவி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். முன்னதாக ரூ.100 அளித்துள்ளது. மத்திய அரசு சார்பில் இதுவரை ரூ.600 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது.



இதனையடுத்து இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், கேரளாவில் ஏற்ப்பட்டுள்ள பாதிப்பை கவனத்தில் கொண்டு, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. கேரள வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடராக எந்தத் தாமதமுமின்றி மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தற்போது கேரளா மாநிலத்தை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. கேரள மாநிலத்தில் மழையால் ஏற்ப்பட்டுள்ள வெள்ள சேதத்தை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.