மத்திய அரசு தமிழக அரசியலின் உள் விவகாரங்களில் தலையிடாது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து டெல்லையில் இன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:- தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இதில் மத்திய அரசு தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. இப்பிரச்சனையானது மாநில விவகாரத்தின் கீழ் வருகிறது. இதில் ஏன் மத்திய அரசு தலையிட வேண்டும். அதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது. அதிமுகவில் நிலவும் பிரச்சனையை அதன் எம்எல் ஏக்கள் தான் தீர்க்க முடியும் என்றார்.


நரேந்திர சர்கார் அருணாச்சல பிரதேச மாநிலத்தை இந்து மாநிலமாக மாற்ற முற்படுவதாக அருணாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டி குற்றம் சாட்டியிருந்தது. இதனையடுத்து அருணாச்சல பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிரண் ரிஜிஜூ காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்தார்.


டுவிட்டர் பதிவு:-


இந்துக்கள் மதமாற்றத்தில் ஈடுபடாத காரணத்தால் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உலகின் பிற எந்த நாடுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் சிறுபான்மையினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது”என்றும், காங்கிரஸ் ஏன்? இது போன்ற பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுகிறது. அருணாச்சல பிரதேசத்தில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக உள்ளனர். இது போன்று வெறுப்புணர்வூட்டும் கருத்துக்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு அனைத்து மதத்தைச்சேர்ந்த மக்களும் சுதந்திரத்துடன் அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.