அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்ற பெயர் மாற்றத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசத்தில் உள்ள “அலகாபாத்” நகரின் பெயரை “பிரயாக்ராஜ்” என்று மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். மேலும் உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் விருப்பம் அலகாபாத்தின் பெயரை “ப்ரயாக்ராஜ்” என மாற்ற வேண்டும். இது ஒரு நல்ல செய்தி மட்டுமில்லை, ஒரு நல்ல தொடக்கம் கூட. எல்லோரும் ஏற்றுக்கொண்டால் நிச்சயம் பெயர் மாற்றம் செய்யப்படும். 


கங்கை, யமுனை இரண்டு நதிகளும் சேரும் இந்த இடத்தில் "பிரம்மன்" குளித்து பிராத்தனை செய்ததால், அந்த இடத்திற்கு "ப்ரயாக்" என பெயர் வந்தது. பெயர் மாற்றத்திற்கு ஆளுநரிடம் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த பெயர் மாற்றம் மகா கும்பமேளாவுக்கு முன்னர் செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இன்று “அலகாபாத்” நகரின் பெயரை “பிரயாக்ராஜ்” என்று மாற்றம் செய்யப்படும் தீர்மானம் உத்தரபிரதேச அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் இனிமேல் “அலகாபாத்” நகரம் “பிரயாக்ராஜ்” என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த பெயர் மாற்றத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


இந்தியாவில் உள்ள 25 நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும் மேற்கு வங்காளத்தின் பெயரை பெங்கால் என பெயர் மாற்றம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இவ்விவகாரம் நிலுவையில் உள்ளது. அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என மாற்றுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக உள்துறை அமைச்சகம் ஒப்புதலை வழங்கியுள்ளது. 


இதேபோன்று உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தை அயோத்தியா என பெயர் மாற்றம் செய்வதற்கான பரிந்துரை மாநில அரசிடம் இருந்து இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.