புதுடெல்லி: ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ அரசாங்கம் ரத்து செய்து சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இது தொடர்பான மனுக்களை விசாரிக்கிறது. ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக, உச்ச நீதிமன்ற இணையதளத்தில் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு  370 சட்டத்தை ரத்து செய்ததை எதிர்த்து நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்கிறது. 2019 ஆம் ஆண்டு முதல் கிடப்பில் இருக்கும் மனுக்கள் விசாரணைக்கு வந்திருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர்.  


ஆனால், 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால், ஜம்மு காஷ்மீரில் இதுவரை இல்லாத அமைதி நிலவுவதாகவும், மக்கள் முன்னேற்றம் அடைவதாகவும் மத்திய அரசு கூறுகிறது.  


அரசியலமைப்பின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, ஜம்மு-காஷ்மீர் முழுவதுமே அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் "முன்னோடியில்லாத" சகாப்தத்தை உருவாக்கியிருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத நெட்வொர்க்குகளால், தீவிரவாதம் என்பது "கடந்த காலத்தின் ஒரு விஷயமாக" மாறுகிறது என்று கூறும் மத்திய அரசு, இப்பகுதியில் 2018 ஆம் ஆண்டில் 1,767 ஆக உயர்ந்த பயங்கரவாதம்-பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட கல் வீச்சு சம்பவங்கள் 2023 இல் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.


ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் செவ்வாயன்று (2023, ஜூலை 11) விசாரிக்க உள்ளது.


மேலும் படிக்க | வாரணாசி முதல் கொச்சி வரை... இந்தியாவில் உள்ள டாப் 10 ரெட் லைட் ஏரியாக்கள்!


ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட மாநிலத்தில், 370 சட்டப்பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்டது.


சட்டப்பிரிவு 370 அமலில் இருந்தபோது, மாநிலத்தில் ஆட்சி அடிக்கடி மாறிக் கொண்டேயிருந்ததையும் சுட்டிக் காட்டும் மத்திய அரசு, பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்யும் இந்திய அரசின் கொள்கையின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. 


370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, அங்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள், வர்த்தகம், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவ்வப்போது மூடப்பட்டதால், ஏழைகள் மற்றும் அமைப்புசாரா துறைகளில் வேலை செய்பவர்களுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்தது, 'பந்த்' மற்றும் கல்லெறிதல்.சம்பவங்கள் அதிக அளவில் இருந்தன. .


கூடுதலாக, உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பயங்கரவாத சூழல் அமைப்பை அகற்றுவதில் மும்முரமாய் செயல்படுகின்ரான என்று மத்திய அரசு கூறுகிறது.  


மேலும் படிக்க | உருளைக்கிழங்கு உனக்கு மட்டும்தானா? கிடையவே கிடையாது! ‘லேஸ்’ மட்டும் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ