புது டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதத்திற்கு மத்தியில், மரண தண்டனை நிறைவேற்ற 7 நாட்கள் காலக்கெடுவை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரியுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை 7 நாட்களுக்குள் தூக்கிலிட வேண்டும் என்று மத்திய அரசாங்கம் விரும்புகிறது. உள்துறை அமைச்சகத்தின் இந்த மனு மிக முக்கியமானது. ஏனெனில் 2012 நிர்பயா கும்பல் பாலியல் பலாத்காரம் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. மறுஆய்வு மற்றும் கருணை மனுவால் நீண்ட கால தாமதம் ஆகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், இதுபோன்ற மனுவை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்குமாறு உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. "குற்றவாளி கருணை மனு தாக்கல் செய்ய விரும்பினால், விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்த 7 நாட்களுக்குள் மறுஆய்வு மற்றும் கருணை மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.


கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் மரண உத்தரவு பிறப்பிக்க அனைத்து நீதிமன்றங்கள், மாநில அரசுகள், சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடுமாறு உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் உத்தரவு பிறப்பித்த 7 நாட்களுக்குள் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கூறியுள்ளது. அதேநேரத்தில் குற்றவாளிகளின் மறுஆய்வு மனு, குரேட்டிவ் பெட்டிஷன் மற்றும் கருணை மனு ஆகியவை குறித்து குறிப்பிட காலத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.


குற்றம் நடந்த நேரத்தில் மைனர் என்று கூறி டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறிய  நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனுவை உச்ச நீதிமன்றம் ஜனவரி 20 அன்று நிராகரித்தது. புதிய மனுவை தாக்கல் செய்வதன் மூலம் வழக்கைத் நீடிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.


இந்த வழக்கின் நான்கு குற்றவாளிகளான வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங், முகேஷ் குமார் சிங் மற்றும் பவன் ஆகியோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் மரண உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பிப்ரவரி 1 ஆம் தேதி அவர் தூக்கிலிடப்படுவார். மனுக்கள் நிலுவையில் இருந்ததால், அவர்களது மரணதண்டனை ஜனவரி 22 லிருந்து ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 1 ஆம் தேதி திட்டமிடப்பட்டது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.