நாடு தழுவிய அளவில் என்.ஆர்.சி அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என மக்களவையில் எம்.எச்.ஏ தெளிவுபடுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 


தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடைபெறுவது வழக்கம். கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. இப்போது மீண்டும் 2020 ஆம் ஆண்டான இந்த ஆண்டில் நடைபெற உள்ளது. ஆனால் கடந்தமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எந்த பிரச்சனையும் எழாத நிலையில் இந்த முறை தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட உள்ளதாக கூறி அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.


இதற்கிடையில் அஸ்ஸாம் மாநிலத்தை போல் இந்தியா முழுவதுமே தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக குடியுரிமை பறிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.


இந்நிலையில், இந்நிலையில், அசாமை போல நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படுமா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் (Nityanand Rai) எழுத்துமூலம் பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் மத்திய அரசு இன்னும் அதுகுறித்து முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.