பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமிய மதத்தில் திருமணம் ஆன ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முத்தலாக் முறையை பின்பற்றுவர். இதுகுறித்து இஸ்லாமிய பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.   


இந்நிலையில், முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் புதிய சட்டத்தை குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த முதலாக் முறையால் பாதிக்கப்படும் இஸ்லாமிய பெண்கள் காவல் துறையினரை முடியாமல், தண்டனைக்கான விதிகள் இல்லாததால் தவறு செய்யும் ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. 


இப்பிரச்சனையை, தீர்க்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை இயற்றும் என்ற தகவல் வெளியாகி வருகிறது.