சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வன விலங்குகள், சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக துன்புறுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி வரும், விலங்குகள் நல அமைப்புகள், சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகள் பயன்படுத்துவதை தடுக்கக் கோரி வருகின்றன.


இதையடுத்து, ஏற்கெனவெ, சிங்கம், புலி ஆகியவற்றை சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளில் பயன்படுத்த தடை விதித்த மத்திய அரசு, தற்போது, யானை, குதிரை, நாய் உள்ளிட்ட விலங்குகளை பயன்படுத்தவும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சட்ட  மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு விலங்குகள் நல அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


மேலும், சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளில் விலங்குகளுக்கு பயிற்சி அளிப்பதால் அவைகள் துன்பறுத்தப்படுகின்றன. இதனால் விலங்குகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் எந்த நிகழ்ச்சிகள் அல்லது கண்காட்சி, சர்க்கஸ், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இனி எந்த விலங்குகளையும் பயன்படுத்த கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.