Rafale jet deal: அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய அரசு!
ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை சீலிடப்பட்ட 3 உறைகளில் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது!
ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை சீலிடப்பட்ட 3 உறைகளில் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது!
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்த வந்த நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த உத்தரவின்படி ரஃபேல் ஒப்பந்தம் எப்போது போடப்பட்டது? விதிமுறைகள் என்ன என்ற விபரங்கள் அடங்கிய அறிக்கையை சீலிடப்பட்ட 3 உறைகளில் இன்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் திங்கள் அன்று (29.10.2018) நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்ககது!