புதுடெல்லி: கேரள உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 3, 2021) தாக்கல் செய்த பதில் வாக்குமூலத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசியின் 1 வது மற்றும் 2 வது டோஸுக்கு இடையில் 84 நாட்கள் இடைவெளி COVID-19 தொற்று பாதிப்பிற்கு எதிரான சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது என கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொச்சி, கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ்  தனது தொழிலாளர்களுக்கு குறைந்த நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி கொடுக்க அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரியது.


"இந்தியாவின் தேசிய கோவிட் தடுப்பூசி திட்டம் அறிவியல் மற்றும் தொற்றுநோயியல் சான்றுகள், உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்கள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது" என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


ALSO READ | Weight Loss in Ayurveda: உடல் எடை குறைப்புக்கு ஆயுர்வேதம் சொல்வது என்ன?


COVID-19 தொற்றுக்கான தடுப்பூசி போடும்  நடவடிக்கை தொடர்பான தேசிய நிபுணர் குழுவின் (NEGVAC) வழிகாட்டுதலின் கீழ், கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸுக்கு இடையிலான இடைவெளி என்பது,  அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ச்சியான திருத்தப்பட்டது என்றும் மத்திய அரசு தனது வாக்குமூலம் மேலும் கூறியுள்ளது.


NEGVAC குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸின் போட்ஆ பிறகு 12-16 வார இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். கோவிஷீல்டின் 1 வது மற்றும் 2 வது டோஸுக்கு இடையில் 84 நாட்கள் கால அளவு கோவிட் -19 க்கு எதிராக சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது என்ற அறிவியல் பூர்வமான கருத்தின் அடிப்படையில் இந்த கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ”என்று மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை உடனே விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!


"நியாயமான காரணங்களுக்காக சர்வதேச பயணம் மேற்கொள்பவர்களுக்கு சிக்கல் ஏற்படாத வகையில், 12-16 வாரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு முன்பே இரண்டாவது டோஸை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. கோவிஷீல்ட் தடுப்பூசியின் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, 12-16 வாரங்கள் இடைவெளியில் போடும் போது மிகவும் சிறந்ததாக இருக்கும் என அறிவியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கோவிஷீல்ட் தடுப்பூசியின் டோஸ் இடைவெளியை அதிகரிப்பதற்கான முடிவு அறிவியல் சான்றுகள் மற்றும் தடுப்பூசியின் செயல்திறன் தரவுகளின்படி நிபுணர் கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது, "என்று மத்திய அரசு மேலும் கூறியுள்ளது.


கேரள உயர் நீதிமன்றத்தில், மனுதாரரின் வழக்கறிஞர் 84 நாள் இடைவெளி என்னும் நிபந்தனை, கட்டண செலுத்தி போடப்படும் தடுப்பூசிகளுக்கு பொருந்தாது என்று கூறியிருந்தார். கோவிஷீல்ட் முன்னதாக, முதல் மற்றும் இரண்டாவது அளவுகளுக்கு இடையே 28 நாள் இடைவெளியை அனுமதித்துள்ளது என்றும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR