ஈரானின் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பது சீனா மற்றும் பாகிஸ்தானை அலற வைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச வர்த்தக வழித்தடத்தில் சபஹார் துறைமுகம் புதிய அத்தியாயத்தை உருவாக்க இருப்பதால் உலக நாடுகள் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் வர்த்தகம் என்பது சர்வதேச வடக்கு தெற்கு காரிடார் எனப்படும் சூயஸ் கால்வாய் வழியாகத்தான் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமான வர்த்தக தொடர்புகள்  பாகிஸ்தான் மாகாணங்கள் வழியாகத்தான்  இதுவரை இருந்து வருகிறது. சபஹார் துறைமுகம் ஒப்பந்தம் நிறைவேறினால் இந்தியாவின் சர்வதேச வர்த்தக தொடர்புகள் மிக எளிதாகி விடும். நாம் பாகிஸ்தானை நம்மி இருக்க வேண்டியதில்லை. இது இந்திய தொழில்துறைக்கு பக்க பலமாக இருப்பது மட்டும் அல்லாமல் தொழில்துறையும் வளர்ச்சியடையும். மேலும் வர்த்தக கப்பல்களின் பயண நாட்கள் மற்றும் எரிபொருள் செலவு போன்றவற்றின் அளவு கணிசமாக  குறையும்.


இந்தியா ஏமாறப் போகிறது. இந்தியாவின் நம்பிக்கையும் தகர்ந்து போகும், ஈரான்-இந்திய சபஹார் துறைமுகம் திட்டம் தடைபடும் என சீனா, பாகிஸ்தான் ஊடகங்கள் எழுதி வருகிறார்கள். மேலும் 'நாங்கள் பொறாமைப்படவில்லை, யதார்த்தத்தைச் சொல்லுகிறோம்' என வயிற்றெரிச்சலுடன் சபஹார் துறைமுக திட்டம் குறித்து எழுதித் தள்ளுகின்றன.