ராஜஸ்தான் காவல்துறையில் திருநங்கைக்கு வாய்ப்பு!
ராஜஸ்தான் காவல்துறையில் திருநங்கைக்கு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜோத்பூர்: ராஜஸ்தான் காவல்துறையில் திருநங்கைக்கு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்தவர் கங்ககுமாரி, இவருக்கு ராஜஸ்தான் காவல்துறையில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிளாக இணையும் முதல் திருநங்கை இவர் என்பது குறிப்படத்தக்கது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களுக்கு பிறகு இவருக்கு பணி ஆனையம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.