ஜம்மு-வில் உயிரிழந்த சந்தன்குமார் உடல் வாரணாசியில் அடக்கம்!!
பாகிஸ்தான் படையினரின் அத்துமீறியத் தாக்குதலில் உயிரிழந்த சந்தன்குமார் உடல் வாரணாசியில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
பாகிஸ்தான் படையினரின் அத்துமீறியத் தாக்குதலில் உயிரிழந்த சந்தன்குமார் உடல் வாரணாசியில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், எல்லைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்!
எனினும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள, ஜம்மு, கத்துவா, சம்பா, பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்தியப் படைவீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த எல்லைப்படை தாக்குதலில் இதுவரை 4 ராணுவ வீரர்களும், 6 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, பாகிஸ்தான் படையின் அத்துமீறிய தாக்குதலில் பூஞ்ச் மாவட்டம் மெந்தார் செக்டார் பகுதியில் சந்தன்குமார் ராய் என்ற வீரர் படுகாயமடைந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் படையினரின் அத்துமீறியத் தாக்குதலில் உயிரிழந்த சந்தன்குமார் உடல் வாரணாசிக்கு, கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
இறுதிச்சடங்கு செய்யப்பட்ட பின்னர், அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.