விஜயவாடா: ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், இப்போது எதிர்க்கட்சித் தலைவருமான என். சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை இரவு கன்னவரம் விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜயவாடா விமான நிலையத்திற்கு சென்ற சந்திரபாபு நாயுடுவுக்கு விஐபி வசதி இல்லாததால், சாதாரண பயணிகள் நின்று சோதனைக்கு உட்படுத்தப்படும் வரிசையில் நின்று பயணிக்க வேண்டியிருந்தது. அங்கு இருக்கும் பாதுகாப்பு நுழைவாயிலில் சந்திரபாபு நாயுடுவை நிறுத்தி ஒரு சிஐஎஸ்எப் படை வீரர் சோதனையிட்டார்.


இதனால் அங்கு பரபரபப்பு ஏற்ப்பட்டது. இந்த சம்பவத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி.) கண்டனம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் விஐபி வரிசையில் டி.டி.பி. கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை அனுமதிக்கப்படவில்லை. பாஜகவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து பழிவாங்கும் அரசியலை செய்கின்றன என்று தெலுங்கு தேசம் கட்சியின் நிவாகு குற்றம் சாட்டினார்.