நிலவை மிகவும் நெருங்கும் வகையில் சந்திரயான் 2 விண்கலத்தில் சுற்றுப் பாதை உயரம் 5-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோவால் கடந்த ஜூலை 22 அம தேதி  சந்திரயான்-2 விண்கலம் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் -2 விண்கலம் சுற்றி வந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது சந்திரயான். பின்னர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணிக்க தொடங்கியது சந்திரயான்.


பின்னர், நிலவின் சுற்றுப்பாதை உயரம் அடுத்தடுத்து குறைக்கப்பட்டு வந்தது. தற்போது 5-வது மற்றும் கடைசி முறையாக சந்திரயான் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது நிலவை மிகவும் நெருங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.



சந்திரயானின் சுற்றுப்பாதை உயரம் குறைந்தபட்சம் 119 கி.மீ என்றும் அதிகபட்சம் 127 கி.மீ என மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் சந்திரயான்-2 விண்கலத்தின் அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.