நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடாக மாறியது இந்தியா..!
Chandrayaan 3: இந்தியா, வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் தரையிரக்கியுள்ளது. இதன் மூலம் வெற்றிகரமாக விண்கலத்தை நிலாவில் தரையிரக்கிய நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தை நிலாவில் தரையிறக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிற்கு முன்னர் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலாவில் தங்களின் விண்கலத்தை பத்திரமாக தரையிரக்கியது. இப்போது அந்த லிஸ்டில் இந்தியாவும் நுழைந்துள்ளது.
சாதனை படைத்தது இந்தியா!
நிலவின் தென் துருவ சுற்றுவட்டப்பாதையில் இது வரை எந்த விண்கலமும் தரையிரக்கப்பட்டதில்லை. முதன் முறையாக, இந்தியாவின் விண்கலமான சந்திரயான் 3 இந்த பகுதியில் தரையிரக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் பெறும் சாதனை நிகழ்வுகளுக்குள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியா விண்கலம் அனுப்ப உள்ள செய்தியை அறிந்தது ரஷ்ய நாடும் தங்களது லூனா 25 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. ஆனால், இந்தி மிஷினில் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போனது.
மேலும் படிக்க | Chandrayaan 3 Updates: நிலவில் கால் பதித்தது சந்திரயான்-3.. மாபெரும் வெற்றி
நிலாவில் பத்திரமாக தரையிரக்கிய 4வது நாடு:
நிலவின் தென் துருவ பகுதிக்கு இது வரை மனிதன் அனுப்பிய எந்த விண்கலமும் சென்றதில்லை. இதனை, சந்திரயான் 3 மாற்றியமைத்துள்ளது. இதற்கு முன்னர், சந்திரயான் 2 விண்கலத்தை நிலாவின் தென் துருவ பகுதிக்கு அனுப்ப இந்தியா முயற்சித்தது. ஆனால், அந்த விண்கலத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த பகுதியில் தண்ணீர் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது, வருங்கால ஆராய்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு முன்னர் அமெரிக்கா, சோவியட் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலாவிற்கு தங்களின் விண்கலங்களை அனுப்பி அதில் வெற்றி கண்டன. தற்போது நான்காவது நாடாக இந்தியா இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளது.
சந்திரயான் 3 லேண்டிங்கினால் என்ன பலன்..?
சந்திரயான் 3 நிலவில் தரையிரக்கப்பட்டுள்ளதால் இந்திய நாட்டிற்கு பல நன்மைகள் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நிலவின் ஆராய்ச்சிக்கு சந்திரயான் 3யின் பயணம் பயன்படும் என்றும் சூரிய குடும்பம் குறித்த பெரிய புரிதலுக்கு இது உதவும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வருங்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு உதவும் பல பணிகள், சந்திரயான் 3 விண்கலத்தினால் நிகழ உள்ளன.
சந்திரயான் குறித்து அறிய வேண்டிய விஷயங்கள்..!
>பல நாடுகள், தங்கள் நாடுகளில் இருந்து விண்ணிற்கு அனுப்பப்படும் விண்கலங்களுக்கு ஒரே பெயரையே பின்பற்றுகிறது. ஆனால், சந்திரயான் 3 கலத்தை அடுத்து ஜப்பான் உடன் சேர்ந்து ஒரு விண்கலத்தை ஏவ இருக்கிறது. இதர்கு LUPEX என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் 2024-25 காலக்கட்டத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன.
>கடந்த 10 ஆண்டுகளில் பல நாடுகள் நிலாவிற்கு தங்கள் நாட்டின் விண்கலங்களை அனுப்ப முயற்சி செய்தது. சீனா, இஸ்ரெல், இந்தியா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகியவையே அந்த நாடுகள். இதில், சீனா மட்டுமே வெற்றி பெற்றது. இதற்காக இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட விண்கலங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்பட்டவை. இந்த நாள் வரை, நிலாவில் உள்ள விண்கலத்தின் பாகங்கள் தனியார் நிறுவனங்களால் அனுப்பப்பட்டவையாக இருக்கின்றன.
> உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் லூனா-25 திட்டத்தில் இருந்து ஐரோப்பா வெளியேறியது.
>சந்திரயான் 3 விண்கலம், கடுமையான குளிர் பகுதியிலும் இருள் சூழ்ந்த பகுதியிலும் தரையிரங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சந்திரயான்-3 குறித்து நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய 5 தகவல்கள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ