Chandrayaan 3 Pragyan Rover Video: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று சந்திரயான்-3  விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் பாய்ந்து செல்லும் முதல் மற்றும் பிரத்யேக காட்சிகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக, பிரக்யான் நிலவில் பயணத்தை தொடங்கியதை இஸ்ரோ உறுதிப்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைந்தது அடுத்த இரண்டு வாரங்களுக்கு சந்திர மேற்பரப்பை ஆய்வு செய்யும் ரோவர் பிரக்யானின் மென்மையான வளைவு நடையை இஸ்ரோ வெளியிட்டுள்ள வீடியோ காட்டுகிறது. சந்திரனின் தென் துருவத்தில் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க காட்சி இதுவாகும். நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் ஒரே நாடு இந்தியா தான் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.


முன்னதாக மற்றொரு ட்வீட்டில், இஸ்ரோ அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி மற்றும் இயல்பாக நடைபெற்று வருகிறது என்று கூறியிருந்தது. "அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி உள்ளன. அனைத்து அமைப்புகளும் இயல்பானதாக காணப்படுகிறது. லேண்டர் மாட்யூல் பேலோடுகளான ILSA, RAMBHA மற்றும் ChaSTE ஆகியவை இன்று இயக்கப்பட்டுள்ளன. ரோவர் மொபிலிட்டி (நகரும்) செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. ப்ராபல்ஷன் மாட்யூலில் SHAPE பேலோட் வரும் ஞாயிற்றுகிழமை இயக்கப்படுகிறது," என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.



மேலும் படிக்க | சந்திரயான்-3: நிலவின் தடம் பதிக்கும் முன்... விக்ரம் லேண்டர் அனுப்பிய நிலவின் வீடியோ!


நிலவின் மேற்பரப்பைத் தொடுவதற்கு சற்று முன்பு நிலவின் படத்தைப் படம்பிடித்த லேண்டர் இமேஜர் கேமராவின் படங்களையும் இஸ்ரோ நேற்று வெளியிட்டது. பூமி மற்றும் சந்திரனைச் சுற்றி 40 நாள் சுற்றுப்பாதை பயணத்திற்குப் பிறகு, சந்திரயான்-3 லேண்டர், 'விக்ரம்', கடந்த புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா சாதனை படைத்தது. மேலும், அமெரிக்க, சோவியட் யூனியன், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியா நிலவில் தடம் பதித்துள்ளது. 



ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்ட் மாதம் நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) கனரக ஏவுகணை வாகனம் பயன்படுத்தப்பட்டது. சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து இஸ்ரோ மற்றும் இந்தியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


மேலும் படிக்க | வீரமுத்துவேலின் தந்தைக்கு அமைச்சர் பொன்முடி வாழ்த்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ