PM Modi Sworn In Ceremony House Cat Viral Video: கடந்த மார்ச் 16ஆம் தேதி 18ஆவது மக்களவை தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்.19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே வாக்கு எண்ணிக்கையும் வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமாக 293 தொகுதிகளையும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றின. இருப்பினும் பாஜக தனிப் பெரும்பான்மை பெறாததால் தற்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஆதரவில் தற்போது ஆட்சியமைத்துள்ளது.


அதன்மூலம், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகவும் பதவியேற்றார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் 282, 303 தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த நிலையில், இம்முறை கூட்டணி கட்சிகளின் துணை பாஜகவுக்கு தேவைப்பட்டது. எனவே, இந்த மூன்றாவது ஆட்சிக் காலத்தில் கூட்டணி கட்சியினருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | PM Modi: பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து... எதற்கு தெரியுமா?


அமைச்சரவையில் மொத்தம் 72 பேர்


இதனால், இம்முறை அமைச்சரவையில் அதிக உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர் எனலாம். 2014ஆம் ஆண்டில் அமைச்சரவையில் பிரதமர் நரேந்திர மோடியுடன், கேபினட் அமைச்சர் 23 பேர், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 10 பேர், 12 இணை அமைச்சர்கள் என மொத்தம் 46 பேர் இடம்பெற்றனர். அதேபோல், 2019 அமைச்சரவையில் பிரதமர் நரேந்திர மோடியுடன், கேபினட் அமைச்சர்கள் 24 பேர், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 9 பேர், 24 இணை அமைச்சர்கள் என மொத்தம் 58 பேர் இடம்பெற்றிருந்தனர். 


ஆனால், தற்போதைய அமைச்சரவையில் பிரதமர் மோடியுடன் கேபினட் அமைச்சர்கள் 30 பேர், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 5 பேர், இணை அமைச்சர்கள் 36 பேர் என மொத்தம் 72 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 11 பேர் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆவார். 9 புதுமுகங்களும் இதில் காணப்படுகிறது.


பதவியேற்பு விழா


இந்த பிரதமர் மோடியுடன் மொத்தம் 72 பேரும் டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை, மாலத்தீவு, சீஷெல்ஸ், வங்கதேசம், மொரீஷியஸ், நேபாளம், பூட்டான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு 7.15 மணிக்கு சரியாக தொடங்கிய பதவியேற்பு விழாவில், முதலில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து, ராஜ்நாத் சிங், அமித் ஷா என தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துகொண்டனர். தொடர்ந்து 72 பேரும் பதவியேற்றதால் இந்த விழா இரவு 9.45 வரை நீண்டது.


இந்நிலையில், நேற்றைய பதவியேற்பு விழாவின் போது ராஷ்டிரபதி பவனில் அடையாளம் தெரியாத ஒரு விலங்கு உலாவுவது நேரலை வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பாஜக எம்.பி., துர்கா தாஸ் மத்திய இணை அமைச்சராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துகொண்ட பின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.



சிறுத்தையா... பூனையா...


அவர் கையெழுத்து போட்டுவிட்டு எழுந்திருக்கும் போது அவருக்கு பின்னால் உள்ள கட்டடத்தில் சிறுத்தை அல்லது காட்டு பூனை போன்ற தோற்றம் கொண்ட விலங்கு நடந்துபோவதை காண முடிகிறது. இது நேரலையில் பதிவானதை அடுத்து பலரும் அதனை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இருப்பினும், அது பூனையா, காட்டு விலங்கா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இதுவரை தெரியவில்லை. சமூக வலைதளங்களில் பலரும் அது சிறுத்தையாக இருக்கலாம் என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும், சிலரோ அது பூனைதான் என்றும் அதன் நிழல் பெரிதாக தெரிகிறது என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


டெல்லி போலீசார் விளக்கம்


இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் அவர்களின் X பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளனர். அதில் அது வெறும் வீட்டுப் பூனைதான் என்றும் தெரிவித்துள்ளனர். டெல்லி போலீசார் அவர்களின் X பதிவில்,"ராஷ்டிரபதி பவனில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பின் வீடியோவில் தெரியும் ஒரு விலங்கை, சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் காட்டு விலங்கு என கூறுகின்றன. இந்த தகவல்கள் உண்மையல்ல, கேமராவில் படம்பிடிக்கப்பட்ட விலங்கு ஒரு வீட்டுப் பூனை தான். தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளனர்.



மேலும் படிக்க | மத்திய அமைச்சரவையின் டாப் பணக்காரர்... யார் அந்த சந்திரசேகர் பெம்மசானி..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ