மத்திய அமைச்சரவையின் டாப் பணக்காரர்... யார் அந்த சந்திரசேகர் பெம்மசானி..!!

Richest Minister In PM Modi Govt 3.0: டாக்டர் சந்திரசேகர் பெம்மாசானி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூரில் (ஆந்திரப் பிரதேசம்) மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெம்மாசானி வெற்றி பெற்றார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 10, 2024, 08:45 AM IST
  • பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
  • டாக்டர் சந்திரசேகர் பெம்மாசானியிடம் ரூ.2.40 கோடி மதிப்புள்ள நகைகளும் உள்ளன.
  • தொழிலதிபரான பெம்மாசானி ஆன்லைன் கற்றல் தளமான உவர்ல்டின் நிறுவனர்
மத்திய அமைச்சரவையின் டாப் பணக்காரர்... யார் அந்த சந்திரசேகர் பெம்மசானி..!! title=

Richest Minister In PM Modi Govt 3.0: டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். 1952, 1957, 1962 ஆகிய காலகட்டங்களில் ஜவஹர்லால் நேரு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக செயலாற்றிய நிலையில், அதன்பின் மூன்று முறை தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்பது பிரதமர் நரேந்திர மோடி தான்.   இந்நிலையில், பிரதமர் மோடி அமைச்சரவையின் பணக்கார அமைச்சர் குறித்து அறிந்து கொள்வோம்.

டாக்டர் சந்திரசேகர் பெம்மாசானி 2024 பொதுத் தேர்தலில் பணக்கார வேட்பாளராக இருந்தார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூரில் (ஆந்திரப் பிரதேசம்) மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெம்மாசானி வெற்றி பெற்றார். அவர் இப்போது பணக்கார எம்.பி மற்றும் பிரதமர் மோடி 3.0 அரசாங்கத்தின் (PM Narendra Modi) பணக்கார அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில் அவர் இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார். தொழிலதிபரான பெம்மாசானி ஆன்லைன் கற்றல் தளமான உவர்ல்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளலாம்.

5700 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு

2024 தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி பெம்மாசானியின் சொத்து மதிப்பு ரூ.5705 கோடி. அவரது பெயரில் ரூ.1038 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. மனைவியுடன்  சேர்த்து ரூ.3.90 லட்சம் ரொக்கம் உள்ளது. பெம்மாசானி, அவரது மனைவி மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் உட்பட நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.16.53 கோடி டெபாசிட் செய்துள்ளனர். இந்த வங்கிகளில் HDFC வங்கி மற்றும் அமெரிக்காவின் JP Morgan Chase Bank ஆகியவை அடங்கும்.

5350 கோடி மதிப்புள்ள பங்குகள், பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்கள்

பெம்மாசானி பங்குகள், பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளார். நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் போன்றவற்றில் ரூ.5350 கோடி முதலீடு செய்துள்ளார். அவர் தேசிய சேமிப்புத் திட்டத்திலோ அல்லது தபால் அலுவலகத் திட்டங்களிலோ எந்த முதலீடும் செய்யவில்லை. ஆனால் எல்ஐசி மற்றும் ஐசிஐசிஐ ப்ருடென்ஷியலின் பாலிசிகள் மொத்தம் ரூ.18.77 கோடி.

மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு காத்திருக்கும் ருசியான டின்னர்... என்னென்ன உணவுகள் தெரியுமா?

பெம்மாசனியிடம் உள்ள சொகுசு கார்கள்

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், பெம்மாசானிக்கு சொந்தமாக 5 கார்கள் இருப்பதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.11 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களில் Mercedes-Benz S-Class Maybach, Mercedes-Benz C-Class, Tesla Model X, Rolls-Royce Ghost மற்றும் Toyota Fortuner ஆகியவை அடங்கும். அவரிடம் ரூ.2.40 கோடி மதிப்புள்ள நகைகளும் உள்ளன.

மனைவி பெயரில் உள்ள சொத்து விபரம்

பெம்மாசானியின் மனைவிக்கு ரூ.2.33 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் உள்ளது. பெம்மாசானி மற்றும் அவரது மனைவிக்கு ரூ.37.84 கோடி மதிப்புள்ள விவசாய நிலமும், ரூ.29.73 கோடி மதிப்பிலான வணிக கட்டிடங்களும், ரூ.36.90 கோடி மதிப்புள்ள குடியிருப்புகளும் உள்ளன.

மேலும் படிக்க | Modi 3.0: கேபினட்டில் மத்திய அமைச்சர்களாக இருக்கும் 7 முன்னாள் முதல்வர்கள்... யார் யார் தெரியுமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News