நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் 6 மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது:- நாட்டின் 6 பெரிய மெட்ரோ நகரங்களில் பெண்களின் பாதுகாப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடம் பெற்றுள்ளது புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் தான் குறைவாக உள்ளது.ஏனென்றால் 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544 மட்டுமே பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்று மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.


அதே போன்று, சென்னையில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில்15 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், டெல்லியில் 1 லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.         


பாதுகாப்பான நகரம் பட்டியல் சென்னை முதலிடத்திலும்,மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதே போன்று கொல்கத்தா 3வது இடத்திலும் பெங்களூரு 5வது இடத்திலும் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மோசமான நகராமாக டெல்லி உள்ளதாக குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும், 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.