சத்தீஸ்கரில் அதிரடிப் படையினரால் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டம் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதியாகும். நக்சல் இயக்கத்தினரை ஒடுக்குவதற்காகச் சிறப்பு அதிரடிப்படை, மாவட்டக் காவல்துறையினர் இணைந்து காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காவல்துறையினரை கண்ட நக்சல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, பதிலடி கொடுத்த அதிரடிப்படை மற்றும் காவல்துறையினர் நீண்ட நேர தாக்குதலுக்கு பின்னர் 10 பேரை சுட்டுகொலை செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பீஜப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மோகித் கார்க் தெரிவித்துள்ளார்.