சத்தீஸ்கர் மாநில வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில், 2 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அங்கு மாவட்ட ரிசர்வ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டம் கொண்டராஸ் வனப்பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.