சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 தொகுதிக்கான முதற்கட்ட வாக்குபதிவு நிறைவடைந்தது
சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலின் 18 தொகுதிக்கான முதற்கட்ட வாக்குபதிவு இன்று நிறைவடைந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதக்கட்டமாக நடைபெற்ற 18 தொகுதியிலும் மொத்தம் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம் விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 தொகுதிகளுக்கு காலை 7 முதல் 3 மணி வரையும், எட்டு தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு மதியம் 1 மணி வரை 25.15 சதவீத வாக்குகள் பதிவாகின. மதியத்திற்கு பிறகு வாக்கு சதவீதம் திடீரென அதிகரித்தது, நண்பகல் 3.00 மணி 47.18% வாக்குகள் பதிவாகின. மாலை 4.30 மணி வரை 56.58% வாக்குகள் பதிவாகின.
காலை 7 மணிக்கு தொடங்கிய 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குபதிவு நண்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. மீதமுள்ள எட்டு தொகுதிகளுக்கான வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெற்று முடிந்தது.
தேர்தல் ஆணையம் சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 தொகுதிக்கான முதற்கட்ட வாக்குபதிவு நிறைவடைந்ததுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.