எதிர்வரும் சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

90 சட்மன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வும், ஆடசியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் இத்தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 77 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்டு வெளியிடப்பட்டள்ள இப்பட்டியலில் முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் விடப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 14 MLA-க்களின் பெயர் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



அமைச்சர் ராம்ஷிலா சாஹூ போன்ற முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இருந்து விடுப்பட்டிப்பதற்கு காரணம், ஒருவேலை வரும் நாடாளுமன்ற தேர்தல்களில் விடுப்பட்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க இருக்குமோ என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.


சத்தீஸ்கர் | சட்டமன்ற தேர்தல்...


  • முதற்கட்ட வாக்குப்பதிவு - நவம்பர் 12, 2018

  • இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - நவம்பர் 20, 2018

  • வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018