சத்தீஸ்கர்: நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்; 6 பேர் காயம்; 2 பேர் கவலைக்கிடம்
சத்தீஸ்கர் மாநில பிஜப்பூரில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 6 bsf வீரர்கள் பேர் காயம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குபதிவு 18 தொகுதிகளுக்கு நடைபெற்றது. நக்சலைட் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமைகளைப் பயன்படுத்தினர். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் மீதமுள்ள 72 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதியும் வாக்குபதிவு நடைபெற உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள தொகுதிகளாக கருதப்படும் பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த நவம்பர் 12 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பமேந் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகில் நக்சலைட் துப்பக்கிட்சூடு நடத்தியுள்ளனர். அந்த தாக்குதல் சம்பவத்திற்கு 2 கமாண்டோ பட்டாலியன் (CoBRA) படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று மஹாதேவ் காட் பகுதியில் நக்சலைட்டுகள் ஆண்டி-லேண்ட் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உளனர். இந்த தாக்குதலில் ஆறு BSF வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவர் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறினர். காயமடைந்த வீரர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
தகவல்களின்படி, பிஜப்பூர் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இன்று காலை நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்ப்பட்டது. துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. அப்பொழுது நக்சலைட்டுகள் IED குண்டுவீச்சி தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு BSF வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.