சத்தீஸ்கரின் ஜஷ்பூரில் ஒரு பெரிய விபத்து நடந்துள்ளது. துர்கா பூஜை கொண்டாடிய பக்தர்கள் மீது வேகமாக வந்த கார் மோதி நசுக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தார் என்றும் 16 பேர் காயமடைந்தனர் எனத் தகவலகள் தெரிவிக்கின்றன. அனைவரும் சிகிச்சைக்காக பதல்கான் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என எக்ஸ்ரேக்குப் பிறகு தெரியவந்ததை அடுத்து, வேற மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பக்தர்கள் மீது மோதிய காரில் இருந்து கஞ்சா மீட்கப்பட்டது. மக்கள் கார் டிரைவரை பிடித்து அடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்த போலீசார் அவரை கைது செய்தனர். ஆத்திரமடைந்த கும்பல் காரை தீ வைத்து எரித்தனர். 


தசரா பண்டிகையின் போது நடந்துள்ள இந்த சம்வம் மிகவும் வேதனையானது. லக்மிபூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவத்தைப் போலவே இந்த விபத்தும் நிகழ்ந்துள்ளது.


 



ஜஷ்பூர் எஸ்பி அலுவலகத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி, ஜஷ்பூர் பாடல்கானில் வேகமாக காரை ஓட்டி வந்து ஏற்றி மக்களை நசுக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட பாப்லு விஸ்வகர்மா மற்றும் சிசுபால் சாஹு ஆகியோர் மத்திய பிரதேசத்தில் வசிப்பவர்கள். அவர்கள் சத்தீஸ்கர் வழியாக காரில் சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த விபத்து குறித்து, முதல்வர் பூபேஷ் பாகேல், ஜஷ்பூர் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது மற்றும் இதயம் உடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். 


குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். சமப்வ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது முதன்மை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. அனைவருக்கும் நீதி வழங்கப்படும். இறந்தவர்களின் ஆன்மாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.


 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR