போலி பாஸ்போர்ட் வழக்கில் உலக தாதாவான சோட்டா ராஜனுக்கு 7 வருட சிறை மற்றும் ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமின் நெருங்கிய நண்பரான சோட்டா ராஜனை இந்திய போலீசார் தேடிவந்தனர்.  இந்த நிலையில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் இருந்த போது சோட்டா ராஜனை சர்வதேச போலீசார் கைது செய்து சிபிஐ போலீசாரிடம் கடந்த  2015-ம் ஆண்டு ஒப்படைத்தனர். அவர் மீது டெல்லி, மும்பை பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட 70 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.


பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோகன்குமார் என்ற பெயரில் சோட்டா ராஜன் போலி பாஸ்போர்ட் பெற்றதாக கடந்த 1998–ம் ஆண்டு சிபிஐ போலீசார் வழக்கு தொடர்ந்தனர். போலி பாஸ்போர்ட்டு வழக்கில் சோட்டா ராஜன் மீதும் அவருக்கு உதவியாக இருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஜெயஸ்ரீ தத்தாராய் ரகட்டே, தீபக் நட்டுவர்லால் ஷா மற்றும் லலிதா லட்சுமணன் ஆகிய 3 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி கோர்ட் சோட்டாராஜன் மற்ற 3 பேருக்கும் 7 வருட சிறை தண்டனை வழங்கியது. மேலும் 3 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.