மருத்துவ பரிசோதனைக்காக AIIMS அழைத்துச் செல்லப்பட்டார் சிதம்பரம்!
தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம், வயிற்று வலி குறித்து புகார் எழுந்ததையடுத்து, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) மருத்துவ பரிசோதனைக்காக சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம், வயிற்று வலி குறித்து புகார் எழுந்ததையடுத்து, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) மருத்துவ பரிசோதனைக்காக சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜீ மீடியா வட்டாரங்களின்படி, இது வழக்கமான சோதனை என்று திகார் சிறை நிர்வாகம் கூறியது, சிதம்பரம் அவரது சோதனைக்குப் பிறகு மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு வரப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறி ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதிலிருந்து சிதம்பரம் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அக்டோபர் 1-ம் தேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் மருத்துவ நோய்களைக் காரணம் காட்டி சிறையில், வீட்டில் சமைத்த உணவைக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார்.
முன்னதாக செப்டம்பர் 12-ஆம் தேதி, சிறைச்சாலையில் உள்ள தனது வாடிக்கையாளருக்கு வீட்டில் சமைத்த உணவை அனுமதிக்க வேண்டும் என்று சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபலின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது, மேலும் சிறையில் உள்ள "அனைவருக்கும் ஒரே உணவு கிடைக்கும்" என்றும் குறிப்பிட்டிருந்தது.
அக்டோபர் 3-ம் தேதி டெல்லி நீதிமன்ற உத்தரவின்படி, சிதம்பரத்தின் நீதித்துறை காவல் அக்டோபர் 17 வரை நீட்டிக்கப்பட்டது. விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது என்று நீதிபதி கூறியிருந்தார்.
இந்திராணியின் மகள் ஷீனா போரா கொலை தொடர்பாக தற்போது மும்பை சிறையில் இருக்கும் பீட்டர் மற்றும் இந்திராணி ஆகியோரால், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். சிதம்பரம் மீது பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read in English