புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு 40_வது நாள் விசாரணையில், ராம்லாலா விராஜ்மானின் சி.எஸ்.வைத்யநாதன் தனது குறுக்கு விசாரணையின் போது, முகமது நபி தனக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு மசூதியைக் கட்ட வேண்டும் என்று கூறியதாகக் கூறினார். இந்த இடத்தின் உரிமையை நிரூபிக்க சுன்னி வக்ஃப் வாரியம் தவறிவிட்டது. நமாஸ் படிப்பதற்கான அடிப்படையில் தான் நிலத்தை கோருகிறது. அயோத்தி வழக்கில் முதல் மனுதாரராக இருந்த மறைந்த கோபால் சிங் விசாரத் சார்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், சிலை கட்டிடத்தில் வைத்த வழக்கு அபிராம் தாஸுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அங்கு அவர் ஒரு பூசாரியாக இருந்தார். அவரை ஒரு ஊழியர் என்று கூறுவது தவறானது என வாதிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, இன்று காலை வழக்கும் போல விசாரணை தொடங்கியபோது, புதிய ஆவணம் எதுவும் பரிசீலிக்கப்படாது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெளிவுபடுத்தினார். அதாவது, இந்து மகாசபாவின் குறுக்கீடு கோரிக்கையை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை இன்று மாலை 5 மணிக்குள் முடிவடைந்து விடும் என்றும், இதுவரை நடைபெற்ற விசாரணை போதும் என்றும் கூறினார். 


இதற்கிடையில், அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற சுன்னி வக்ஃப் வாரியம் முடிவு செய்துள்ளது. வாரியத் தலைவர் வழக்கை வாபஸ் பெறுவதற்கான பிரமாணப் பத்திரத்தை நடுவர் குழுவின் உறுப்பினர் ஸ்ரீராம் பஞ்சுவுக்கு அனுப்பினார். இதன் பின்னர், நடுவர் குழு உச்சநீதிமன்றத்தில் அந்த ஆவணத்தை தாக்கல் செய்துள்ளது. 


அயோத்தி வழக்கின் 40_வது நாள் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுன்னி வக்ஃப் வாரியத்தின் மேல்முறையீட்டை வாபஸ் பெறுவது தொடர்பாக நீதிமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. இன்று மாலை 5 மணிக்குள் விவாதம் நிறைவடையும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெளிவுபடுத்தி உள்ளார். இன்று விவாதம் செய்ய அனுமதிக்கப்பட்டவரை தவிர வேறு யாருடைய தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.


இந்தியாவுக்கு வெளியே சென்று இந்துக்கள் யாரையும் அழிக்கவில்லை, ஆனால் வெளியில் இருந்து வந்தவர்கள் இந்தியாவுக்கு அழிவை உருவாக்கினார்கள். பகவான் ராம் அங்கே பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள் என்றும், முஸ்லிம்கள் அது தங்களுக்கான பாரம்பரிய இடம் என்று அவர்கள் விரும்புவதாக பராசரன் கூறினார்.


இரண்டாவது மசூதியில் முஸ்லிம்கள் நமாஸ் படிக்க முடியும் என்று பராசரன் கூறினார். அயோத்தியில் 50-60 மசூதிகள் உள்ளன. ஆனால் இந்துக்களுக்கு இது ராமரின் பிறப்பிடமாகும். பகவான் ராமரின் பிறப்பிடத்தை நாம் மாற்ற முடியாது. பகவான் ராமரின் பிறப்பிடத்திற்காக இந்துக்கள் நீண்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இது ராமரின் பிறப்பிடம் என்று பல நூற்றாண்டுகளாக நம்புகிறோம் எனவும் பராசரன் கூறினார். 


அயோத்தியில் மசூதி கட்ட கோயிலை அழித்த வரலாற்று தவறுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று பராசரன் கூறினார். எந்தவொரு ஆட்சியாளரும் இந்தியாவுக்கு வந்து நான் பேரரசர் பாபர் என்றும், சட்டம் எனக்கு கீழே உள்ளது என்றும், நான் சொல்வதே சட்டம் என்றும் சொல்ல முடியாது என்று பராசரன் கூறினார்.


இன்று 5 மணிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியுள்ளதால், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.