நிதி ஆயோக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதி ஆயோக் அமைப்பின் 4 வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். 


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்–மந்திரிகளும் கலந்துகொள்கிறார்கள். 


இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசும் போது, பிரதமரை சந்திக்க இருப்பதாகவும்,காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பார் என்றும், தமிழகம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவையும் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், காவிரி விவகாரம் குறித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும், பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பும் எடப்பாடி பழனிசாமி, அன்று இரவே தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார்!