புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சமீப காலங்களில் இந்தியா சீனா இடையில் ஓயாமல் எல்லைப் பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், பெய்ஜிங் அருணாச்சல பிரதேசத்திற்கு அருகிலுள்ள எல்லைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவைச் சேர்ந்த இமேஜிங் நிறுவனமான பிளானட் லேப்ஸ் இதற்கான செயற்கைக்கோள் படங்களைக் கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் சாரி சூ ஆற்றின் குறுக்கே சுமார் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகக் அந்த நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 2019 இல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டுமானம் எதுவும் நடக்கவில்லை.


இதற்கிடையில், அருணாச்ச பிரதேசத்தில் (Arunachal Pradesh) சீன கிராமம் தொடர்பான அறிக்கைகள் குறித்து பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த அறிக்கைகளுக்கு பதிலளித்தது. எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த சமீபத்திய அறிக்கைகளை அரசாங்கம் பார்த்ததாகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் அனைத்து வித நடவடிக்கைகளையும் இந்தியா தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.


அருணாச்சல பிரதேசம் உட்பட எல்லைப் பகுதிகளில் உள்ள தனது குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அப்பகுதிகளில் உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிக்க அங்கு இப்பணிகளின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.


"இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனா (China) கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த சமீபத்திய அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற உள்கட்டமைப்பு கட்டுமான நடவடிக்கைகளை பல முறை சீனா மேற்கொண்டுள்ளது" என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.


"இதற்கு பதிலளிக்கும் விதமாக, எங்கள் அரசாங்கமும் சாலைகள், பாலங்கள் போன்றவற்றை நிர்மாணிப்பது உள்ளிட்ட எல்லை உள்கட்டமைப்பை முடுக்கிவிட்டுள்ளது. இது எல்லையில் உள்ள உள்ளூர் மக்களுக்கு மிகவும் தேவையான இணைப்பை வழங்கியுள்ளது" என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.


ALSO READ: நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்: மத்திய அரசு


சீனா வீடுகளை கட்டியதாக கூறப்படும் இரண்டு படங்களை ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டது. ஆகஸ்ட் 26, 2019 தேதியிட்ட முதல் படத்தின்படி மக்கள் யாரும் அங்கு வசிப்பது தெரியவில்லை. இரண்டாவது படம் நவம்பர் 2020 –ன் கட்டமைப்புகளைக் காட்டுகிறது.


இந்தியாவுக்கும் (India) சீனாவுக்கும் இடையில் சர்க்கைக்குரிய பகுதியில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பெய்ஜிங் (Beijing) தொடர்ந்து கட்டுமானத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும், ஆற்றின் குறுக்கே உள்ள பாதையை பின்பற்றினால், மேல் சுபன்சிரி மாவட்டத்திற்குள் 60-70 கி.மீ.க்கு மேல் சீனா நுழைந்துள்ளதாகவும் பாஜகவின் (BJP) அருணாச்சல பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் தபீர் காவ் கூறியுள்ளார். சீனர்களும் ஆற்றின் குறுக்கே ஒரு சாலையை அமைத்து வருவதாகவும் அவர் கூறினார்.


இதற்கிடையில், ‘இந்திய பிரதேசத்தில்’ சீன உள்கட்டமைப்பு திட்டத்தின் அறிக்கை குறித்து மோடி அரசிடம் (Modi Government) காங்கிரஸ் விளக்கம் கோரியுள்ளது.


அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் சீனா ஒரு முழு கிராமத்தை கட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி உண்மையா பொய்யா என்பதை மோடி அரசாங்கம் தெளிவு படுத்துமா? இது உண்மையாக இருந்தால், பிரதமர் மோடி நாட்டின் இறையாண்மையை விட தனது பிம்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என சீனா புரிந்து கொண்டுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது” என்று காங்கிரஸ் ட்வீட் செய்தது.


எப்படியும், சீனா இப்படிப்பட்ட ஒரு செயலை செய்தால் அதற்கு இந்திய அரசு தகுந்த முறையில் தகுந்த பதிலை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


ALSO READ: Indira Gandhi இந்தியாவின் முதல் பெண் பிரதமரான நாள் இன்று


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR