அருணாச்சல பிரதேசம் மற்றும் தைவான் ஆகிய பகுதிகளை சீனாவின் பிராந்தியத்தில் குறிப்பிடவில்லை என்று சீனாவில் சுங்க அதிகாரிகள் 30,000 உலக வரைபடங்களை அழித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட-கிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தென் திபெத்தின் பகுதியாக சீனா கருதுகிறது. அருணாச்சல பிரதேசத்தை பார்வையிட இந்தியத் தலைவர்கள் அனுமதிக்க இயலாது என சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.


எனினும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பகுதி எனவும், இந்தியாவின் கட்டமைக்கு உட்பட்ட இடம் எனவும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. மேலும்  இந்திய தலைவர்கள் இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தை பார்விடுவதை தடுக்க இயலாது எனவும் தெரவித்து வருகிறது. இதற்கிடையில் தைவானின் பிறிந்த தீவினையும் சீனா தனது என உரிமை கோரி வருகிறது.


3,488 கி.மீ நீளம் கொண்ட அசல் கட்டுப்பாட்டு எல்லை (LAC) எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளும் இதுவரை 21 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.


இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தை சீனாவின் பகுதியாக அடையாளப்படுத்தாத 30,000 வரைபடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.


சீனாவில், இருந்து மற்றொரு நாட்டுக்கு ஏற்றுமதியாகவிருந்த இந்த வரைபடங்களை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்துள்ளனர். எனினும், இந்த வரைபடங்கள் எந்த நாட்டுக்கு ஏற்றுமதியாகவிருந்தன என்ற விவரம் வெளியாகவில்லை.


திபெத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்து ஆட்சி செய்து வருகிறது. அதிலும், திபெத்தின் தெற்குப் பகுதிக்கு சொந்தமானதுதான் அருணாசலப் பிரதேசம் என்று அந்நாடு வெகு காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. குறிப்பாக, இந்தியப் பிரதமர், ராணுவ தளபதிகள் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் அருணாசலப் பிரதேசத்துக்கு செல்லும் சமயங்களில் எதிர்ப்பு தெரிவிப்பதை சீனா வாடிக்கையாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.