அருணாசல பிரதேசத்தின் தலைநகரம் இடாநகரில் முன்னாள் முதல் மந்திரி டோர்ஜி காண்டு பெயரில் மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அருணாசல பிரதேசத்தின் தலைநகரம் இடாநருக்கு சென்றார். அருணாசல பிரதேசத்தின் முன்னால் முதல்-மந்திரி டோர்ஜி காண்டு பெயரில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கு புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 


வடகிழக்கு மாநிலங்களுக்கான கவுன்சில் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பிறகு கலந்து கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் நரேந்திர மோடிக்கு அருணாச்சல பிரதேசத்திற்கு வருகைக்கு சீனா தனது "எதிர்ப்பை" வெளிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளின் உறவு பாதிக்கும் வகையில் உள்ளது எனவும் சீனா கூரியுள்ளது. தென் திபெத்தின் ஒரு பகுதி அருணாச்சல பிரதேசம் என சீனா கூறி வருகிறது. 


சீன-இந்திய எல்லைப் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் தெரிவித்து உள்ளார்.


"சீன அரசாங்கம் அருணாச்சல பிரதேசம் என்று அழைக்கப்படுவதை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. மேலும் அங்கு இந்திய தலைவர்கள் விஜயம் செய்வதை உறுதியாக எதிர்க்கிறது," என ஜெங் கூறியதாக அரசு சார்பான செய்தி நிறுவனம் சின்ஹூவா தெரிவித்துள்ளது.


இந்தியா-சீனா எல்லை 3,488 கி.மீ ஆகும். இந்த எல்லை பிரச்சனை சம்பந்தமாக இரு தரப்பினரும் இதுவரை 20 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.