புதுடெல்லி: மற்ற நாடுகளின், குறிப்பாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை சீனா நிறுத்துவதாக இல்லை போலும். மூக்கை நீட்டி மாட்டிக்கொள்வது சீனாவின் பழக்கம் என்பது உலகறிந்த உண்மைதான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா சீனா இடையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவைத் தூண்ட சீனா செவ்வாய்க்கிழமை மீண்டும் முயன்றது. லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், இந்தியா சட்டவிரோதமாக லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாக்கியுள்ளது என்றும், எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை சீனா வலுவாக எதிர்க்கிறது என்றும் கூறினார்.


"இந்தியா (India) சட்டவிரோதமாக உருவாக்கிய லடாக் (Ladakh) என்னும் யூனியன் பிரதேசத்தை சீனா அங்கீகரிக்கவில்லை. இராணுவ கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காக சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு கட்டுமானத்தை நாங்கள் எதிர்க்கிறோம்" என்று செய்தித் தொடர்பாளர் வாங் கூறினார்.


ALSO READ: PM Modi உட்பட பல VIP-க்களை உளவு பார்க்கும் சீனாவின் சில்லறைத்தனம்!!


"சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் அண்மையில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்துப்படி, இரு தரப்பினரும் நிலைமையை சிக்கலாக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. நிலைமையை எளிதாக்குவதற்கான இரு தரப்பினரின் முயற்சிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்" என்று வாங் மேலும் தெரிவித்தார்.


இந்திய விமானப்படைத் தலைவர், ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதௌரியா, LAC-ல் உள்ள தற்போதைய நிலை கவலைக்குரியதாக உள்ளது என்று கூறியதையடுத்து சீனாவின் (China) இந்த கருத்துகள் வெளிவந்துள்ளன. IAF தலைவரின் கூற்றுப்படி, கிழக்கு லடாக்கில் (Ladakh) நிலவும் மோதல்களுக்கு மத்தியில் வடக்கு எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற நிலை நிலவுகிறது.


எனினும், எந்தவொரு நிகழ்விற்கும் இந்திய ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என்றும் எந்தவொரு தவறான செயலையும் எதிர்கொள்ள IAF தீர்மானத்துடன் உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.


"நமது வடக்கு எல்லைகளில் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை ஒரு குழப்பமான நிலையில் உள்ளது – அங்கு இப்போது யுத்தமும் இல்லை, சமாதானமும் இல்லை .... அண்மையில் ரஃபேல்ஸ் மற்றும் பிற விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் IAF-ன் திறனும் பலமும் கணிசமாக அதிகரித்துள்ளது." என்று விமானத் தலைவர் மார்ஷல் பதௌரியா கூறினார்.


"எந்தவொரு எதிர்கால மோதலிலும் நமது வெற்றிக்கு விமானப்படையின் சக்தி ஒரு முக்கிய பங்களிக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.


ALSO READ: மீண்டும் மீண்டும் சீண்டும் சீனா: அஜித் டோவல் தலைமையில் அவசர ஆலோசனை!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR