சண்டை போட்டு ஜெயிக்க முடியலை.. பாட்டு பாடியாவது ட்ரை பண்ணலாம் என்கிறது சீன படை..!!!
இந்தியா தொடர்ந்து உயரமான பகுதிகளை, அதாவது மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ப்ளாக் டாப், சுசுல், ரெச்சின் லா போன்ற பல முட்க்கியமான பகுதிகளை தனது கட்டுபாட்டில் வைத்துக் கொண்டுள்ளது.
பல மாதங்களாகவே இந்திய சீன எல்லையில் (India China Border) பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜூன் மாதம் கல்வான் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்தே நிலைமை பதற்றமாகவே உள்ளது.
இந்திய சீன எல்லையில் லடாக்கில் (Ladakh) ஃபிங்கர் 4 பகுதியில் செப்டம்பர் 8 ம் தேதி இரு தரப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சுடும் சம்பவங்களால் பதற்றம் அதிகரித்தது.
முன்னதாக ஆகஸ்ட் 29-31 க்கு இடையில் தெற்கு பாங்கோங் (Pangong) ஏரியின் அருகே உயரத்தை ஆக்கிரமிப்பதற்கான சீன முயற்சியை இந்திய இராணுவம் முன்கூட்டியே கண்டறிந்து முறியடித்தது.
கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரியின் தென் கரைக்கு அருகே சீனத் துருப்புக்கள் ஒரு இந்திய நிலைக்கு மிக அருகில் வர முயற்சித்ததாகவும், காற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இந்திய இராணுவம் கூறியது. 45 வருட இடைவெளிக்குப் பிறகு LAC-யில் இப்படி துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.
பங்கோங் ஏரியின் வடக்கு கரையில் உள்ள சீன (China) படையினர் ஃபிங்கர் -4 பகுதியைக் கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அதனை நமது வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.
இந்தியா தொடர்ந்து உயரமான பகுதிகளை, அதாவது மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ப்ளாக் டாப், சுசுல், ரெச்சின் லா போன்ற பல முட்க்கியமான பகுதிகளை தனது கட்டுபாட்டில் வைத்துக் கொண்டுள்ளது.
எல்லை பகுதியில் சீன இராணுவத்தின் எந்தவொரு அத்துமீறல் நடவடிக்கைகளையும் எடுக்க இந்திய இராணுவம் இப்போது லடாக் செக்டாரில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சீன படையினர், இயற்கையாகவே கடும் குளிர் பகுதியில் போரிடும் வல்லமை இல்லாதவரக்ள், அதோடு, அவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டாயத்தின் பேரில் தான் ராணுவத்தில் சேர்கின்றனர். அதனால் அவர்களுக்கு நாட்டுப் பற்றும் குறைவு.
இந்தியா-சீன எல்லையில், ஒன்று செய்ய இயலாத சீன படையினர், ஒலிபெருக்கிகள் மூலம் பஞ்சாபி பாடல்களை ஒலிக்க செய்து இந்திய வீரர்களின் கவனத்தை சிதறடிக்க முயற்சிக்கின்றனர்
அதனால் தான் இந்திய வீரர்களை சண்டை போட்டு எதிர்க்க திராணியின்றி, பஞ்சாபி பாடல்களை நம்பியுள்ளனர்.
இது அவர்களின் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மேலும் படிக்க | 1962 போரில் லடாக் ரெசாங் லாவின் வீர வரலாறு தெரியுமா..!!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR