கொரோனா இருப்பதாக சந்தேகம்.. பிளாட்டில் தன்னை தானே பூட்டிக் கொண்ட நபர்!
இந்த நபர் ஒரு சீன குடிமகன் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவல்களைப் பெற்றதும், சுகாதாரத் துறை எச்சரிக்கப்பட்டு இரவில் அந்த இடத்தை அடைந்ததனர்.
இந்த நபர் ஒரு சீன குடிமகன் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவல்களைப் பெற்றதும், சுகாதாரத் துறை எச்சரிக்கப்பட்டு இரவில் அந்த இடத்தை அடைந்ததனர்.
உத்தரபிரதேசத்தின் (Uttar Pradesh) கிரேட்டர் நொய்டாவில், OPPO நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸால் (Corona Virus) பாதிக்கப்படுவார் என்ற பயத்தில் ஒரு பிளாட்டில் தன்னைப் பூட்டிக் கொண்டார். இந்த நபர் ஒரு சீன குடிமகன். இந்த சம்பவம் குறித்த தகவல்களைப் பெற்றதும், சுகாதாரத் துறை எச்சரிக்கப்பட்டு இரவில் அந்த இடத்தை அடைந்ததனர். இரவில், இந்த நபர் கிரேட்டர் நொய்டாவில் உள்ள GIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா வைரஸின் சந்தேகத்திற்குரிய இந்த நோயாளி GIMS மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் கண்காணிக்கப்பட்டுள்ளார். கிரேட்டர் நொய்டாவின் பீட்டா 2 காவல் நிலையப் பகுதியின் ஏடிஎஸ் பாரா டிஸ்கோ சொசைட்டியின் நிலை இதுவாகும். இங்கே அந்த நபர் இரவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார் என்ற பயத்தில் தன்னை பிளாட்டில் பூட்டிக் கொண்டார்.