இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டால் பீதி அடைந்துள்ள சீனா, இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவு வேண்டும் என தூது விடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்லைப் பிரச்சினைக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் விடோங் (Sun Weidong) கூறினார்.


புதுடில்லி ( New Delhi): எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் (India) கடுமையான அணுகுமுறையினால் சீனா (China) இப்போது அடிபணிந்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் விடோங், இந்தியாவும் சீனாவும் போட்டி நாடாக அல்லாமல் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்று கூறினார். எல்லைப் பிரச்சினைக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று சன் விடோங் மேலும் கூறினார்.


"இந்தியா-சீனா இடையிலான எல்லை தகராறு  நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு முக்கியமான சிக்கலான பிரச்சினை. அமைதியான அணுகுமுறை மற்றும் பேச்சு வார்த்தையின் மூலம் இதற்கான தீர்வுகளைகண்டறிய வேண்டும்” என இந்தியாவுக்கான சீன தூதர் கூறினார்.


கல்வான் பள்ளத்தாக்கில் படையினருக்கு இடையிலான வன்முறை மோதல் குறித்து விடோங் கூறுகையில், ஜூன் 15 அன்று சீனா-இந்தியா எல்லையின் மேற்கு பிராந்தியத்தில் கால்வன் பள்ளத்தாக்கில் வன்முறை மோதல் ஏற்பட்டது, இது சீனா அல்லது இந்தியா விரும்பாத ஒரு நிகழ்வு என்றும், கமாண்டர் நிலையிலான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சீன படைகள் பின்வாங்கிவிட்டன என்று  கூறினார்.


ALSO READ | COVID-19 சிகிச்சையில் Hydroxychloroquine சிறப்பாக செயல்படுகிறது: Donald Trump


இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன் சார்ந்த நடவடிக்கையின் மூலம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனத் தூதர் கூறினார். இரு தரப்பினரும் பரஸ்பரம் நலன்களை கருத்தில் கொண்டு, முக்கிய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று அவர் கூறினார்.


ALSO READ | உய்குர் முஸ்லிம்களை ஒடுக்கும் சீனாவிற்கு எதிராக America எடுத்துள்ள நடவடிக்கை


சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பு குறித்து அவர் கூறுகையில், எல்லை பிரச்சனை தொடர்பான நிகழ்வுகளுக்குப் பிறகு, இந்தியா-சீனா உறவுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.


விடோங் தனது அறிக்கையில் இந்தியாவும் சீனாவும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் இரு நாடுகளும் பரஸ்பர நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.