உய்குர் முஸ்லிம்களை ஒடுக்கும் சீனாவிற்கு எதிராக America எடுத்துள்ள நடவடிக்கை

உய்குர் முஸ்லிம்களை ஒடுக்கும் சீன நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் 4 சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது

Last Updated : Jul 10, 2020, 07:19 PM IST
  • சீன அரசு, முஸ்லிம் மக்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்து கருக்கலைப்பு செய்து வருகிறது
  • சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் 2015 முதல் 2018 வரை 84 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.
  • 2017 முதல், குறைந்தது 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் முகாம்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்
உய்குர் முஸ்லிம்களை ஒடுக்கும் சீனாவிற்கு எதிராக America எடுத்துள்ள நடவடிக்கை title=

உய்குர் முஸ்லிம்களை ஒடுக்கும் சீன நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் 4 சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது

வாஷிங்டன்(Washington): சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஜின்ஜியாங் பிராந்தியத்தில் (Xinjiang region) உய்குர் முஸ்லிம்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக ஒரு சீன நிறுவனம் உட்பட நான்கு உயர் அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இப்போது இந்த அதிகாரிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.

ALSO READ | சிங்கப்பூரில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடக்கும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

 

தடைசெய்யப்பட்ட அதிகாரிகளில், சிஞ்சியாங் உய்கர் தன்னாட்சி பிராந்தியத்தின் (XUAR) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சென் குவாங்கோ (Chen Quanguo), முன்னாள் துணை கட்சி செயலாளர் ஜு ஹைலூன் ((Zhu Hailun),   சின்ஜியாங் பொது பாதுகாப்பு பணியகத்தின் கட்சி செயலாளர் வாங் மிங்ஷன் (Wang Mingshan)  மற்றும் கட்சியின் முன்னாள் செயலாளர் ஹுவோ லியுஜூன்(Huo Liujun) ஆகியோர் அடங்குவர்.

சின்ஜியாங் உய்கர் தன்னாட்சி பிராந்தியத்தில் சிறுபான்மையினரின் மனித உரிமைகளை மீறியது, அவர்களை உடல் ரீதியாக சித்திரவதை செய்தல், எந்தவொரு குற்றமும் இன்றி சிறையில் அடைத்தல் போன்றவற்றில் சம்பந்தப்பட்ட சீன அதிகாரிகளும் அமைப்பும் குற்றவாளிகள் என அமெரிக்க அரசின் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தடையின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் எந்தவொரு நிதி பரிவர்த்தனை அல்லது உறவை மேற்கொள்ளக் கூடாது.

ALSO READ | COVID-19 சிகிச்சையில் Hydroxychloroquine சிறப்பாக செயல்படுகிறது: Donald Trump

 

2016 முதல், சின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான பெரிய அளவிலான இயக்கம் நடந்து வருகிறது என்றும் சீன அரசாங்கம் வேண்டுமென்றே உய்குர் மற்றும் பிற சிறுபான்மையினரை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்கா கூறுகிறது. சிறுபான்மையினர் தேவையில்லாமல் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்றும் 2017 முதல், குறைந்தது 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் முகாம்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் மூலம், சீன அரசு, முஸ்லிம் மக்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்து கருக்கலைப்பு செய்து வருவது தெரியவந்துள்ளது. முஸ்லிம்களின் மக்கள் தொகையை குறைக்க சீனா மனித உரிமைகளை பெரிய அளவில் மீறுகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதற்காக, மக்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களின் பிறப்பு விகிதம், 2015 முதல் 2018 வரை 84 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் அந்த அளவு மேலும் குறைந்துள்ளது. ஒரு குழந்தை கொள்கையை சீனா கைவிட்டுவிட்டது. ஆனால் அது இன்னும் உய்குர் முஸ்லிம்களுக்கு பொருந்தும். சீன அரசாங்கம் எல்லா வகையிலும் அவர்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்த எண்ணுகிறது.

சீனாவின் நிபுணர் அட்ரியன் ஜான்ஸ்  (Adrian Zenz) சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் கொள்கைகள் குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்துள்ளார். அதில் அவர் மக்கள் படுகொலைகான கொள்கை என்று குறிப்பிட்டார். கிராமப்புறத்தில் உள்ள உய்குர் பெண்களுக்கான கருத்தடை இயக்கத்தை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் சீனா மறுக்கிறது. பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை கைவிட செய்வதற்காக உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சீனா கூறுகிறது.

Trending News