69வது SOBHA Filmfare Awards South 2024 தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள JRC கன்வென்ஷன் சென்டரில் தென் படங்களை பாராட்டும் வகையில் விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பல புதுமுக இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விருதுகளை பெற்றுள்ளனர். தெலுங்கு படங்களில் நானியின் தசரா 6 விருதுகளை பெற்றது. ஆனந்த் தேவரகொண்டாவின் பேபி ஐந்து விருதுகளை பெற்றது. தமிழில் சித்தார்த்தின் சித்தா படம் 7 விருதுகளையும், பொன்னியின் செல்வன் 2 ஐந்து விருதுகளையும் வென்றது. மேலும் பல படங்கள் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளன. யார் யார் என்ன என்ன விருதுகளை பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | GOAT Movie Third Single Troll Memes Tamil : விஜய் ரசிகர்களே கலாய்க்கும் GOAT 3rd Single! இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்..


பிலிம்பேர் விருது வென்ற தமிழ் படங்கள்:


சிறந்த தமிழ் படத்திற்கான விருதை சித்தா படமும், சிறந்த இயக்குனருக்கான விருதை சித்தா படத்தின் இயக்குனர் எஸ் யு அருண் குமார் பெற்றுள்ளார். சிறந்த படத்திற்கான விமர்சகர்கள் விருதை வெற்றிமாறனின் விடுதலை முதல் பாகம் படம் பெற்றுள்ளது. சிறந்த ஆண் நடிகருக்கான விருதை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்காக விக்ரம் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விமர்சகர்கள் விருதை சித்தா படத்திற்காக சித்தார்த் பெற்றுள்ளார். அதே படத்தில் நடித்த நிமிஷேன் சிறந்த பெண் நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகைகளுக்கான விமர்சகர்கள் விருதை பர்கானா படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷும், டாடா படத்திற்காக அபர்ணாதாஸ் ஆகியோரும் பெற்றுள்ளனர். 


சிறந்த பெண் துணை நடிகை விருதை சித்தா படத்திற்காக அஞ்சலி நாயர் பெற்றுள்ளார். மேலும் சிறந்த இசை ஆல்பத்திற்கான விருதை திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் சித்தா படத்திற்காக பெற்றுள்ளனர்.  சிறந்த பாடல் வரிகளுக்கான விருதை இளங்கோ கிருஷ்ணன் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற அகநக பாடலுக்காக வென்றுள்ளார். சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருதை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்ற சின்னஞ்சிறு நிலவே என்ற பாடலுக்காக ஹரிச்சரன் வென்றுள்ளார். சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான விருதை சித்தா படத்தில் இருந்து கண்கள் ஏதோ பாடலுக்காக கார்த்திகா வைத்தியநாதன் வென்றுள்ளார். சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்காக ரவிவர்மன் வென்றுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்காக தோட்டா தரணி சிறந்த தயாரிப்பு வடிவமைப்பிற்கான விருதை பெற்றுள்ளார்.


சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்) - விடுதலை: பகுதி 1 (வெற்றி மாறன்)


சிறந்த முன்னணி நடிகர் (ஆண்) - விக்ரம் (பொன்னியின் செல்வன் - 2)


சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - சித்தார்த் (சித்தா)


சிறந்த முன்னணி நடிகர் (பெண்) - நிமிஷா சஜயன் (சித்தா)


சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - ஐஸ்வர்யா ராஜேஷ் (ஃபர்ஹானா), அபர்ணா தாஸ் (தாதா)


துணை வேடத்தில் சிறந்த நடிகர் (ஆண்) - ஃபஹத் பாசில் (மாமன்னன்)


துணை வேடத்தில் சிறந்த நடிகர் (பெண்) - அஞ்சலி நாயர் (சித்தா)


சிறந்த இசை ஆல்பம் - திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் (சித்தா)


சிறந்த பாடல் வரிகள் - இளங்கோ கிருஷ்ணன் (ஆக நக - பொன்னியின் செல்வன் 2)


சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - ஹரிச்சரண் (சின்னஞ்சிறு நிலவே- பொன்னியின் செல்வன் 2)


சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - கார்த்திகா வைத்தியநாதன் (கங்கல் எதோ- சித்தா)


சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் பாகம் 2)


சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு -தோட்ட தாரணி (பொன்னியின் செல்வன் 2)


மேலும் படிக்க | Actor Who Wanted To Be A Police Before Entering Tamil Cinema: போலீஸாக நினைத்த பிரபல நடிகர்! இப்போ டாப் ஸ்டார்களுள் ஒருவர்..யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ