தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரில் சந்திப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. எடைக்கு எடை காணிக்கை வழங்கும் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்டுள்ளார். 


அப்போது, துலாபாரம் வேண்டுதலை நிறைவேற்ற காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தராசில் அமர்ந்த போது, திடீரென தராசு உடைந்து கீழே விழுந்தது. இதில் தராசின் இரும்பு கொக்கியும் தலையில் விழுந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டது. அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.



இந்த நிலையில் கேரளாவுக்கு பிரச்சாரத்திற்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சசி தரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சசி தரூர், இந்திய அரசியலில் அரிதாக காணக்கிடைக்கும் நல்ல பண்புக்கு, நிர்மலா சீத்தாராமன் உதாரணம் எனப் புகழ்ந்துள்ளார்.