உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளர் அறிக்கை அளிக்க ரஞ்சன் கோகோய் உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: உன்னாவ் சிறுமி பாதுகாப்புக்கோரி எழுதிய கடிதத்தை தன்னிடம் தாமதாமாக வழங்கியது ஏன்?  என்பது குறித்து ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் சேங்கர் மீது சிறுமி உன்னாவ் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமி உன்னாவ் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறுமியின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். 


இதனிடையே, பாலியல் புகார் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என எம்.எல்.ஏக்களின் சார்பில் சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டியதாகவும், வாபஸ் பெறாவிட்டால் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டல் விடுத்ததாகவும் எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் என சிறுமி  கடந்த 12ஆம் தேதி நீதிமன்றத்தில் கடிதம் எழுதியுள்ளார். 


இந்நிலையில், சிறுமியின் கடிதத்தை தன்னிடம் தாமதமாக வழங்கியது ஏன்? என உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். மேலும், இது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.