வகுப்பறையில் உள்ள இருக்கைக்கு இரு கும்பலுக்கு இடையே ஏற்பட்ட தகராறால் மாணவரை முதுகில் பிளேடால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் படர்பூர் என்ற பகுதியில் இயங்கிவரும் மத்திய பள்ளியில் நேற்று அனைவருவரையும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான சம்பவம் நடந்துள்ளது. மத்திய பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணர்வர்களுக்கிடையே வகுப்பறையில் உள்ள இருக்கைக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. 


வாய்த்தகராறு அதிகரித்துள்ள நிலையில் மற்றொரு மாணவர் தன் எதிரியை பிளேடால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் ANI-க்கு அளித்த பேட்டியில்; இது குறித்து எனது வகுப்பாசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 



இதையடுத்து, இந்த சம்பவம்குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து. விசாரணை நடத்தி வருகின்றனர்!