ராஜஸ்தான் மாநிலத்தில் ஆங்கில வழிக்கல்வி 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான குறிப்புப் புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை தீவிரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலத்தில் அம்மாநில பாடநூல் வாரியம் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகிறது. அதில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியில் குறிப்பு புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதிர திலகர் தீவிரவாதத்தின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது. 


 



 


அந்த புத்திகத்தில் அமைதி வழியில் சென்று கொண்டிருந்த சுதந்திர போராட்டத்தை சிதைத்த அவர் தீவிரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது. தற்போது இதனால் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 8-ம் வகுப்பு சமூக அறிவியில் குறிப்பு புத்தகத்தின் பகுதி 22-ல் 267-ம் பக்கத்தில் இந்தச் சர்ச்சை குரிய கருத்து வெளியாகி உள்ளது.