தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான கூலியை பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறு தொழில் செய்வோருக்கு நிதியுதவி தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வங்கிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்நிலையில், 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்கிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 35 லட்சம் பேர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்கள் கூலியை வங்கிகளுக்கு சென்று பெற்றுக் கொள்கிறார்கள்.


இது குறித்து அவர் கூறுகையில்.... கூறுகையில் வங்கி அதிகாரிகள் மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். நோய் குறையும் வரை அடுத்த 3 மாதத்திற்கு இதே நடைமுறை தொடரும் என அவர் தெரிவித்தார்.


100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.