CNG கேஸ் விலை கடும் உயர்வு, புதிய ரேட் என்ன?
CNG Price Hike: பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், டெல்லி என்சிஆர் பகுதியில் சிஎன்ஜியின் விலை அதிகரித்துள்ளது.
புதுடெல்லி: CNG Price Hike: பணவீக்கத்தால் சாமானிய மக்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், டெல்லி என்சிஆர் பகுதியில் சிஎன்ஜியின் விலை அதிகரித்துள்ளது. டெல்லியில் சிஎன்ஜியின் விலை ரூ.2.28 அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத் ஆகிய இடங்களில் கிலோவுக்கு ரூ.2.56 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 45 நாட்களில் மூன்றாவது முறையாக சிஎன்ஜி விலை அதிகரித்துள்ளது. இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் நிறுவனம், சிஎன்ஜி விலை உயர்வு குறித்த தகவலை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.
டெல்லி-என்சிஆரில் சிஎன்ஜியின் புதிய விலை என்ன?
டெல்லி-என்.சி.ஆர்., சிஎன்ஜி (CNG) இப்போது உயர்த்தப்பட்ட விலைக்கு ஏற்ப கிடைக்கும். டெல்லி-என்சிஆரின் இந்த அதிகரிப்புக்குப் பிறகு, சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.52.04 ஆக உயர்ந்துள்ளது, நொய்டா (Noida) , கிரேட்டர் நொய்டா மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் அது கிலோவுக்கு ரூ.58.58 என்ற விகிதத்தில் கிடைக்கும்.
ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்
முன்னதாக டெல்லியில் சிஎன்ஜி விலை ரூ.49.76 ஆகவும், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் ஒரு கிலோ ரூ.56.02 ஆகவும் இருந்தது. இப்போது இந்த உயர்வுக்குப் பிறகு, நீங்கள் இப்போது சிஎன்ஜிக்கு ஒரு கிலோவுக்கு ரூ.52.04 செலுத்த வேண்டும்.
45 நாட்களில் மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது
இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் நிறுவனம் அக்டோபர் 1 முதல் மூன்றாவது முறையாக சிஎன்ஜியின் விலையை உயர்த்தியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் அக்டோபர் 1 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 45 நாட்களில், டெல்லியில் சிஎன்ஜியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.6.84 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 15 சதவீதத்துக்கும் மேல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ALSO READ | Free LPG Scheme: மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் பெறுவது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR